மு.க. அழகிரின்னா இன்னும் பயந்து ஓடுறாங்களே திமுகவினர்!

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி நேற்று செங்கல்பட்டுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்பாராக்காத உள்ளூர் திமுக பிரபலங்கள் ஆங்காங்கே தலைமறைவானதால் நகரமே பரபரப்பானது.

மு.க.அழகிரி அரசியல் காரணத்துக்காக செங்கல்பட்டுக்கு வரவில்லை. மாறாக அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஒரு பத்திரப் பதிவுக்காக வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தெரிந்த பிறகுதான் திமுகவினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டு ரிலாக்ஸ் ஆனார்களாம்.

MK Azhagiri visits Chengalpattu

திமுகவின் முக்கியப் புள்ளிகளில் முதன்மையான புள்ளியாக இருந்தவர் மு.க.அழகிரி. ஆனால் காலத்தின் கோலமாக இன்று அவர் திமுகவிலேயே இல்லை. கட்சியை விட்டு மட்டுமல்லாமல், கருணாநிதியின் இதயத்திலிருந்தும் ஓரம் கட்டப்பட்டு விட்டார்.

அண்ணன் எழுந்து போனதால் காலியான திண்ணையில் இன்று தம்பி மு.க.ஸ்டாலின் ஜம்மென்று உட்கார்ந்து புதிய நாட்டாமையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று திடீரென அழகிரி செங்கல்பட்டுக்கு வந்தார். அவர் வரும் தகவல் அறிந்ததும் உள்ளூர்ப் பிரபலங்கள் பலர் அவசரம் அவசரமாக செங்கல்பட்டைக் கிளம்பி வேறு பக்கம் போய் விட்டார்களாம். அழகிரி தங்களைப் பார்க்க வந்து விட்டால் பெரிய சிக்கலாகி விடுமே, ஸ்டாலின் கோச்சுக்குவாரே என்ற பயம்தான் காரணமாம்.

ஆனால் அழகிரியோ நேராக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் அழகிரிக்கு 34,000 சதுரஅடி நிலம் உள்ளது. அதை ஒரு கார் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு 7 வருட குத்தகைக்கு அழகிரி கொடுத்துள்ளாராம். அதற்கான பதிவுதான் நேற்று நடந்ததாம். அதற்காகத்தான் அழகிரி வந்தாராம்.

இது தெரியாமல் திமுக புள்ளிகள் ஓடியது செம காமெடியாக இருந்தது.. அந்தப் பயம் இருக்கனும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+