கருணாநிதி சமாதியில் கண்கலங்கி அழுதார் மு.க.முத்து.. கைத்தாங்கலாக கூட்டிவரப்பட்டார்!
கருணாநிதி சமாதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் மு.க.முத்து
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மூத்த மகன் மு.க.முத்து இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது மறைவினால் தமிழக மக்கள் மிகுந்த வருத்தத்திலும் சோகத்திலும் உள்ளனர்.

வெளியூர்களிலிருந்து தங்கள் குடும்பத்தினருடன் சென்னை வந்து கருணாநிதி சமாதியை பார்த்து அஞசலி செலுத்திவிட்டு செல்கின்றனர். இதேபோல திரைப்பிரபலங்களும் தங்களது கண்ணீர் அஞ்சலியினை வணக்கத்துடன் சமாதி வந்து செலுத்தி விட்டு செல்கிறார்கள்.

கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். ஆனால் கருணாநிதியின் முதல் மனைவியின் மகனாக மு.க.முத்து மட்டும் வராமலே இருந்தார். அவர் சிறிது காலமாகவே உடல்நலம் குன்றி உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை மு.க.முத்து தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்த மெரினாவுக்கு வந்தார். அவரை சிலர் கைத்தாங்கலாக கூட்டி வந்தனர். தந்தை சமாதி முன் வந்து நின்ற மு.க.முத்து, தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் சிறிது நேரம் சமாதியை பார்த்து கண்கலங்கி அழுதார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications