தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்!
சென்னை: சட்டசபை தேர்தலில் 89 இடங்களைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவின் சட்டசபை குழு தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் தி.மு.க. 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தமிழக அரசியலில் சட்டசபையில் எதிர்க்கட்சி அதிக உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியினர் வரிசையில் அமருவது இதுதான் முதல் முறை. தி.மு.க. பொருளாளராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பிரதான எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு ஏற்க உள்ளார்.
தி.மு.க. சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இந்த கூட்டத்திலேயே தி.மு.க. சட்டசபை துணைத்தலைவராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சட்டசபை கொறடாவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இதனிடையே சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications