ஸ்ரீரங்கத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ5 ஆயிரம் கொடுக்க அ.தி.மு.க. திட்டம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ5 ஆயிரம் கொடுக்க ஆளும் அண்ணா தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 13-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் உச்சகட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் ஆளும் அண்ணா தி.மு.க.வினர் ஏராளமான முறைகேடுகளில் ஈடுபடுவதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் திருச்சி அருகே சோமரசம்பேட்டையில் தி.மு.க.வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கினார்.

இந்த பிரசாரத்தின் போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்படது. இதனால்தான் இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
ஒரு ஓட்டுக்கு ரூ5 ஆயிரம் கொடுக்க அண்ணா தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது. ஆனால் இதிலும் ரூ2 ஆயிரம் மட்டுமே கொடுத்து ஊழல் புரிகின்றனர் அண்ணா தி.மு.க.வினர். 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அச்சாரமாக ஸ்ரீரங்கம் தேர்தல் நடைபெறுகிறது. ஸ்ரீரங்கத்தில் முறைகேடுகள் மூலம் வெற்றி பெற அண்ணா தி.மு.க. முயற்சிகளை மேற்கொள்கிறது என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications