சட்டசபை திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு- எதிர்க்கட்சித் தலைவராகிறார்
சென்னை: சட்டசபை திமுக குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.
சட்டசபை தேர்தலில் திமுக 89 இடங்களில் வென்றுள்ள பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

சட்டசபையின் முதலாவது கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் திமுக செயற்குழு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக சட்டசபை குழுவின் துணைத் தலைவராக துரைமுருகன்; கொறடாவாக சக்கரபாணி; துணை கொறடாவாக கு. பிச்சாண்டி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திமுக குழுவின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவரே சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார். கடந்த சட்டசபை தேர்தலில் திமுக 23 இடங்களில்தான் வென்றது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்திருந்தது. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வந்தார்.

தற்போதைய தேர்தலில் திமுக 89 இடங்களில் வென்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications