14 வயதில் தொண்டன்... 65 வயதில் தலைவன்... ஸ்டாலின் திமுகவில் கடந்து வந்த பாதை
சென்னை: திமுக தொண்டர் முதல் தலைவர் வரை ஸ்டாலின் வளர்ச்சி அடைந்துள்ளது தொண்டர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மறைந்தார். இதையடுத்து திமுக தலைவர் பதவிக்கு வரும் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதற்கான வேட்புமனுவை இன்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்நிலையில் தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் ஸ்டாலின் போட்டியின்றி தலைவராகிறார்.

தம்பதி
இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்டாலின் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம். மு.க.ஸ்டாலின் கடந்த 1953-ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

திமுக இளைஞர் அமைப்பு
1967ல் முதல் முறையாக திமுகவில் சேர்ந்தார். அதே ஆண்டு 14 வயதாக இருந்த போது, திமுகவிற்கு பிரசாரம் செய்தார். இதுவே ஸ்டாலினின் முதல் பிரசாரம் ஆகும். 1968ல் திமுக இளைஞர் அணிக்கு முன்னோட்டமாக இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கினார்.

ஸ்டாலின் வாழ்வில் திருப்பம்
அதன்பின் சென்னை நியூ கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். 1973-ஆம் ஆண்டு திமுக பொதுக்குழுவில் உறுப்பினர் ஆனார். 1975-இல் எமர்ஜென்சி காரணமாக சிறைக்கு சென்றார். இந்த சிறை வாழ்க்கை ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் திருப்பாக இருந்தது.

குழந்தை பிறப்பு
பின்னர் 1975-இல் துர்காவை மணந்தார். 1977ல் உதயநிதி ஸ்டாலின் பிறந்தார்.
1978ல் முதல் திரைப்படத்தை தயாரித்தார் , சில காட்சிகளில் நடித்தார். 1984ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல்முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஸ்டாலின்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றியும் தோல்வியும்
1988ல் ஒரே ரத்தம் படத்தில் நடித்தார். 1989ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1993-ஆம் ஆண்டு இளைய சூரியன் என்ற இதழை தொடங்கினார்.

மீண்டும் திருப்புமுனை
1996ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற்றார். 1996 சென்னையின் 37வது மேயராக ஸ்டாலின் தேர்வானார். அவர் அப்பதவியில் 2002-ஆம் ஆண்டு வரை நீடித்தார். சென்னையின் மேயரானது ஸ்டாலின் அரசியல் பயணத்தில் மற்றொரு திருப்பு முனையானது.

அமைச்சரானார்
2001ல் மூன்றாவது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்றார். 2001ல் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிர்வாக துறை அமைச்சரானார்.

கொளத்தூர் தொகுதியில் வெற்றி
2008ல் திமுகவில் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. 2009ல் தமிழகத்தின் துணை முதல்வரானார். அவர் அப்பதவியில் 2011-ஆம் ஆண்டு வரை நீடித்தார். 2011ல் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். 2016ல் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் வென்றார்.

வேட்புமனு
2016ல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். 2017ல் திமுகவின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து திமுகவுக்கு தலைவர் பதவிக்கு வரும் 28-ஆம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே நிலையில் இன்று வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டாலினை தவிர்த்து வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் அவர் திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications