உலகிலேயே தோல்வியையே சந்திக்காத ஒரே தலைவர் கருணாநிதி.. ஸ்டாலின் புகழாரம்!
உலக அளவில் தோல்வியையே சந்திக்காத ஒரே தலைவர் கருணாநிதி என்று மு.க.ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்.
சென்னை : தமிழக சட்டசபைக்காக நடந்த 13 தேர்தல்களிலும் ஒரு முறைகூட தோல்வியைக் கண்டிராத ஒரே தலைவர் கருணாநிதி என்று மு.க.ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்தில் செயல்தலைவர் ஸ்டாலின் விழாப் பேரூரையாற்றினார். அப்போது அவர்"94ம் ஆண்டு பிறந்த நாள் விழா, வைரவிழா இரண்டையும் ஒருங்கிணைத்து நடக்கும் விழாவில் முன்னிலை ஏற்கும் வாய்ப்பை பெற்று, திமுக சார்பில் செயல்தலைவர் என்ற முறையில் அனைவருக்கும் இதயப் பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்றத் தேர்தலில் குளித்துறை தொகுதியில் நிற்க வேண்டும் என்று அண்ணா கருணாநிதிக்கு ஆணையிட்டார். அதனை ஏற்று அவர் சென்றார், நின்றார், வென்றார். இதனைத் தொடர்ந்து 13 தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கக்கூடியவர் கருணாநிதி. தோல்வி என்பதே இல்லாமல் வெற்றியையே ருசித்தவர், 48 ஆண்டுகாலம் திமுகவை தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார். திராவிட இயக்கம் நூற்றாண்டு விழா காண்கிறது, அதில் 80 வருடங்கள் கருணாநிதி பங்களிப்பு.
19 ஆண்டுகாலம் முதல்வராக இருந்து அதிலும் சாதனை படைத்தவர் கருணாநிதி. வைர விழா அரசியல் கூட்டணிக்கானது என கூறியவர்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஏனெனில் அப்படி விமர்சனம் செய்தவர்களுக்கு அடையாளம் தர நான் விரும்பவில்லை. எனவே இந்த மேடையின் கவுரவத்தை நான் குறைக்க விரும்பவில்லை என்று விரும்புவதால் அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை" என்றார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications