மனைவி துர்காவுடன் லண்டன் கிளம்பினார் மு.க. ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் புதன்கிழமை இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் கிளம்பினார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் லண்டன் கிளம்பிச் சென்றார். புதன்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பிச் சென்ற அவர் வரும் 8ம் தேதி ஊர் திரும்புவார்.

அவர் லண்டனில் 5 நாட்கள் தங்குகிறார். ஸ்டாலின் அவ்வப்போது லண்டன் சென்று ஓய்வு எடுத்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அவர் சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ளவர்களிடம் மீட்பு பணி குறித்து கேட்டறிந்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கட்டட விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications