விவசாயம் மடிஞ்சு போச்சு..நிலத்தை வாங்க ஆள் இல்லை.. பணப்புழக்கம் குறைஞ்சு போச்சு..ஸ்டாலின் பேச்சு
கடலூர் : இன்றைய தமிழகத்தில் நிலம் விற்க பலர் முன் வந்ததாலும், நிலத்தை வாங்கிட யாரும் இல்லை என்றும் காரணம் பணப்புழக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர், புதுச்சத்திரத்தில் ‘நீதி கேட்கும் பேரணி' என்ற பெயரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது..

நிலத்தை விற்க கூடிய புரோக்கர்கள் என்னை சந்தித்தனர். வீடுகளை விற்க, நிலங்களை விற்க பலர் முன் வருகின்றனர். ஆனால் வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. பணப்புழக்கம் முடக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வருமானம் இல்லை என்று என்னிடம் பலரும் வருத்தம் தெரிவித்தனர். இவர்களுக்கு நான் ஆறுதல் தெரிவித்தேன்.
விவசாய பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். விவசாயம் மடிந்து போச்சு. நிலத்தை விற்கவாவது செய்வோம் என்றால் இதனை வாங்க ஆள் இல்லை. இது போன்று தமிழகம் முழுவதும் இந்த நிலைதான்.
4 ஆண்டுகள் ஆட்சியில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.
ஜெ.,விடுதலை வாங்கினார். முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் நாங்கள் கூறிய பிரச்னைகளுக்கு ஏதும் பதில் சொல்லியிருக்கின்றீர்களா ? சமூக நீதிக்காக போராடிய கட்சி திராவிட முன்னேற்ற கழகம் . அதி.மு.க.,வின் அக்கிரமத்திற்கு நீதி கேட்கும் உணர்வு அனைவருக்கும் வர வேண்டும். தி.மு.க., ஆட்சி காலத்தில் அனைத்து துறையிலும் சாதனை படைத்துள்ளோம்.
உலகத்தில் எங்கும் குடி நீரை விற்க கூடிய நிலை இல்லை. இங்கே அம்மா தண்ணீர் சும்மா இல்லை, 10 ரூபாய்க்கு விற்கின்றனர். கலைஞர் ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
ஆனால் அம்மா ஆட்சியில் அனைத்து திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு பெருக வில்லை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது கொலை , கொள்ளைகள் அதிகரித்துள்ளது. புதிய தொழிற்சாலைகள் எதுவும் துவக்கப்பட வில்லை.
இவ்வாறு பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications