மத்தியில் காங். ஆட்சிக்கு வந்தால்...ஒரு நிமிடத்தில் எடப்பாடி ஆட்சி அகற்றம்.. ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு நிமிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி ஒரு நிமிடத்தில் அகற்றப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணியை ( முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன்) ஆதரித்து ஸ்டாலின் இன்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழை பேசி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

எடப்பாடி ஆட்சி அகற்றம்
தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது ; "மத்தியில் சர்வாதிகார மோடி ஆட்சியும், மாநிலத்திலே எடப்பாடி பழனிச்சாமியின் உதவாக்கரை ஆட்சியும் நடந்து வருகிறது. எனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு நிமிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி அகற்றப்படும்.

விஷவாயு எடப்பாடி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயியான தான் இந்த மாநிலத்தை ஆள்வதை ஸ்டாலின் விரும்பவில்லை என்று சொல்கிறார். ஆனால் நான் சொல்கிறேன். விவசாயி நாட்டை ஆளலாம், ஸ்டாலினாகி நான் அதை மனப்பூர்வமான வரவேற்பேன். அதை ஆதரிக்கவும் செய்வேன். ஆனால் எடப்பாடி விவசாயியா? அவர் ஒரு விஷவாயு. விவசாயி என்று சொல்வதற்கு அருகதை இல்லை.

சம்பந்தி வீட்டில் எடப்பாடி
கஜா புயலால் வாழ்வாதரத்தை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை இந்த விவசாயி போய் சந்தித்தாரா? சேலத்தில் தனது சமந்தி வீட்டில் கிடா விருந்து இருந்தை காரணமாக சொன்னார். அதன்பிறகு ஒரு வாரம் கழித்து போய் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க போனார், ஆனால் வானிலை சரியில்லை என பாதியில் திரும்பினார். அதன் பிறகே பார்த்தார்.

பசுமைவழிச்சாலை
சேலம் -சென்னை எட்டு வழிச்சாலைக்கு குரல் கொடுத்து வருபவர் இந்த விவசாயி(எடப்பாடி). இவர் தான், 8வழிச்சாலைக்காக 154 ஏரிகளை அழிக்க முடிவு செய்துள்ளார். 349 குளங்களை அழிக்க ஆதரித்துள்ளார், 30 ஆயிரம தென்ன மரங்களை வெட்ட ஒத்துக்கொண்டிருக்கிறார். 4000 கிணறுகளை மூட உத்தரவிட்டிருக்கிறார். 6600 ஆழ்துளை கிணறுகளை அழிக்க சொல்கிறார், இவரா விவசாயி.

மேகதாது அணை
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்காதவர் தான் இந்த விவசாயி. விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை தடுக்க இவருக்கு தெம்பு இருக்கா, தைரியம் இருக்கிறதா? 2000 உதவித்தொகை விவகாரத்தில் மக்கள் அதிகமாக ஆசைப்படுகிறார்கள் என மக்களை கொச்சை படுத்தி பேசினாரே அது நியாயமா?" இவ்வாறு ஸ்டாலின் பல விஷங்கள் குறித்து பேசினார். குறிப்பாக பொள்ளாச்சி விவகாரம் குறித்து மிக நீண்ட விளக்கத்துடன் பேசினார். இதேபோல் ஜெயலலிதா கைரேகை விவகாரம் குறித்தும், ஒபிஎஸ்சின் தர்ம யுத்தம் குறித்தும் பேசினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications