கருணாநிதி உடல்நிலை நேற்றைப் போலவே சீராக இருக்கிறது.. மு.க.ஸ்டாலின் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று போலவே இன்றும் சீராக தொடர்வதாக அக்கட்சி செயல் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் கருணாநிதி. உடனிருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். இன்று இரவு மருத்துவமனையில் இருந்து தனது இல்லத்திற்கு கிளம்பினார் ஸ்டாலின். முன்னதாக நிருபர்களிடம் பேசிய அவர், நேற்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தபடி கருணாநிதியின் உடல் நிலை இன்றும் தொடர்கிறது. அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று கூறி விட்டு கிளம்பிச் சென்றார்.

 MK Stalin says, Karunanidhi health condition is stable as stated in yesterdays Kauvery medical bulletin

இதனிடையே ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கருணாநிதி உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

மேலும் காவேரி மருத்துவமனை வளாகத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கருணாநிதி சுவாச இயந்திரங்களின் உதவியின்றி இயல்பாக சுவாசித்து வருவதாகவும் அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுவதை பார்த்து மருத்துவர்களை வியந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+