ஜெயலலிதா மரண விவகாரம்- நான் சொன்னதுபோல் "ஏ1" ஓபிஎஸ்தான்.... ஸ்டாலின் பொளேர்
ஜெயலலிதா மரண விவகாரத்தில் நம்பர் ஒன் குற்றவாளி ஓபிஎஸ்தான் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதா மரண விவகாரத்தில் நான் முன்பே கூறியதை போல், நம்பர் ஒன் குற்றவாளி ஓ.பன்னீர் செல்வம்தான் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக ஆளும்கட்சியினர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சியினருடன் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ஆர்கே நகரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மற்றொரு விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில்தான் இந்த பணப்பட்டுவாடாவே நடக்கிறது.
இந்த பணப்பட்டுவாடா தொடர்பான அனைத்து வீடியோ ஆதாரங்களையும் பென் டிரைவில் காப்பி செய்து பத்ராவிடம் அளித்துள்ளோம். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஆர்கே நகர் தேர்தல் அமைச்சரின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 89 கோடியால்தான் ரத்து செய்யப்பட்டது என்பதையும் நினைவுக்கூர்ந்தோம்.
தேர்தலில் நிற்க முடியாது என்பதை அறிந்த அதிமுகவினர் தற்போது பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். நான் அன்று சொன்னது போல் ஜெயலலிதா மரணத்தில் முதல் குற்றவாளி ஓபிஎஸ்தான் என்றார் ஸ்டாலின்.


Click it and Unblock the Notifications
