கருணாநிதியும் சோம்நாத் சாட்டர்ஜியும் நெருங்கிய நண்பர்கள்- மு.க.ஸ்டாலின்
கருணாநிதியும் சோம்நாத் சாட்டர்ஜியும் நெருங்கிய நண்பர்களாவர் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: கருணாநிதியும் சோம்நாத் சாட்டர்ஜியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி சிறுநீரக கோளாறுகளால் இன்று காலமானார். அவருக்கு வயது 89. அவரது இறப்புக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் கூறுகையில் தலை சிறந்த பாராளுமன்ற ஜனநாயகவாதியும், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்ட முன்னாள் மக்களவைத் தலைவரும், நடுநிலை தவறாத நாயகரும், மக்களவைத் தலைவர்களில் தனிச் சிறப்புமிக்கவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சோம்நாத் சாட்டர்ஜி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்த திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை கட்டி காக்கும் தலைவராகவும், மக்களவையை கட்சி மன மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை தவறாது நடத்தியவர். தமிழ்நாடு சட்டமன்ற பொன் விழாவில் தலைவர் கலைஞர் அவர்களின் அழைப்பினை ஏற்று பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.
ஆரோக்கியமான அரசியல் கருத்துகளுக்கும், ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும் பாராளுமன்றத்தில் இடம் கொடுத்து ஜனநாயக மரபுகளை பாதுகாத்த மிகச்சிறந்த தலைவரின் மறைவு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும்.
இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications