விபத்தில் சிக்கி தவித்த நபருக்கு ஓடிச் சென்று உதவிய மு.க.ஸ்டாலின்!
சென்னையில் சாலை விபத்தில் சிக்கியவரை மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
Recommended Video

சென்னை: சென்னையில் சாலை விபத்தில் சிக்கியவரை மு.க.ஸ்டாலின் வாகனம் ஏற்பாடு செய்துவைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை பெரவல்லூர் பகுதியில் உள்ள பேப்பர் மில்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒருவர் விபத்தில் சிக்கி காயமடைந்ததை கண்டார்.

உடனே தனது வாகனத்தை விட்டு இறங்கிய ஸ்டாலின் அந்த நபரை சென்று பார்த்துவிட்டு ஆட்டோவை வரவழைத்தார். பின்னர் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.
அந்த நபர் செல்வராஜ் என்றும் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது கார் மீது மோதியதில் விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. ஆட்டோ கிளம்பும் வரை அங்கேயே இருந்துவிட்டு பின்னர் தனது வாகனத்தில் ஏறி ஸ்டாலின் புறப்பட்டார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications