லோக்சபா தேர்தலுக்குப் பின் பாஜக அணிக்கு ஆதரவா?: மு.க. ஸ்டாலின் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை திமுக ஆதரிக்குமா என்பதற்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தி எக்கனாமிக் டைம்ஸ் ஆங்கில நாளேட்டுக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி விவரம்:

கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போதைய லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு எப்படியான வாய்ப்புகள் இருக்கின்றன?

பதில்: தொண்டர்கள் பலம் கொண்ட திமுக தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொள்கிறது. தமிழகத்தில் ஜெயலலிதாவின் முறையற்ற நிர்வாகம், மிகப் பெரும் ஊழல்கள், ஜனநாயகமுறையற்ற ஆட்சிக்கு எதிரான அலை வீசுகிறது. அதனால் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக வெல்லும் என்று உறுதியாக நம்புகிறோம்.

ஏன் தூக்கு தண்டனை ஒழிப்புக்கு முன்னுரிமை?

ஏன் தூக்கு தண்டனை ஒழிப்புக்கு முன்னுரிமை?

கேள்வி: தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று திமுக மட்டுமே தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன?

பதில்: மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பது தலைவர் கருணாநிதியின் நிலைப்பாடு. இதற்கு ஏராளமான வரலாற்று சான்றுகள் உண்டு. தமிழகத்தில் முதல் முறையாக முதல்வர் பொறுப்பை கருணாநிதி ஏற்ற போது தியாகு மற்றும் கலியபெருமாள் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்தார். அதேபோல் 5வது முறையாக முதல்வராக பொறுப்பு வகித்த காலத்தில் நளினியின் தூக்கு தண்டனையை ரத்து செய்தார்.

உச்சநீதிமன்றமும் கூட அண்மையில் 15 பேரின் தூக்கு தண்டனையை ஒரே ஒரு தீர்ப்பின் மூலம் ரத்து செய்திருக்கிறது. திருச்சியில் நடைபெற்ற திமுகவின் 10வது மாநில மாநாட்டிலும் தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினோம். அதனைத் தொடர்ந்து தற்போது தேர்தல் அறிக்கையிலும் அது இடம்பெற்றுள்ளது.

தேர்தலுக்குப் பின் பாஜக அணியில்?

தேர்தலுக்குப் பின் பாஜக அணியில்?

கேள்வி: நரேந்திர மோடியை அண்மையில் கருணாநிதி புகழ்ந்திருந்தார்.. தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இணைய வாய்ப்புகள் இருக்கிறதா? உங்கள் கருத்து என்ன?

பதில்: ஒரு தலைவரை புகழ்வதும் கூட்டணி அமைப்பது என்பதும் வேறு வேறானவை. கூட்டணியைப் பொறுத்தவரையில் திமுகவின் பொதுக்குழுவில் பாஜக மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. தற்போது ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். இதே நிலைமை தேர்தலுக்குப் பின்னரும் தொடரும்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் பாதிப்பா?

ஸ்பெக்ட்ரம் ஊழலால் பாதிப்பா?

கேள்வி: ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து தேசிய அளவில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இது திமுகவை குறிப்பாக ஆ.ராசாவை தேர்தலில் நிறுத்தியிருப்பதன் மூலமாக எந்த வகையில் பாதிக்கும்?

பதில்: திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற சக்திகளின் பிரசாரம் இது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எந்த வகையிலும் இந்த பிரசாரத்தால் திமுகவுக்கு பாதிப்பு இல்லை. மத்தியில் மதச்சார்பற்ற ஒரு நிலையான அரசு அமைப்பதில் எங்கள் தலைவர் கருணாநிதி முக்கியப் பங்காற்றுவார்.

மோடி பற்றி..

மோடி பற்றி..

கேள்வி: நரேந்திர மோடி பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: நரேந்திர மோடி, ஒரு மாநிலத்தின் முதல்வர். சட்டசபை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். குஜராத்துக்கு அவர் சேவையாற்றியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். அவரை விமர்சிப்பவர்கள், அவர் ஒரு மதவாதி என்கின்றனர். பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக அவரை முன்னிறுத்தியுள்ளது. ஜனநாயகத்தில் மக்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கக் கூடியவர்கள்.

ராகுல் நிர்வாகத் திறமையை அறிய.வாய்ப்பு இல்லை

ராகுல் நிர்வாகத் திறமையை அறிய.வாய்ப்பு இல்லை

கேள்வி: ராகுல் காந்தியை நீங்கள் மிகவும் நெருக்கமாக நன்கு அறிவீர்கள்.. அவரது தலைமை பற்றிய உங்கள் கருத்து?

பதில்: தேசியப் பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சியில் இருந்து வந்தவர் ராகுல் காந்தி. தீவிர அரசியலில் கடந்த 8 ஆண்டுகாலமாக பணியாற்றி வருகிறார். அவரது கட்சியில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறார். அவரது மதச்சார்பற்ற தன்மையை பாராட்டுகிறேன். அவரது நிர்வாகத் திறமையை அறிந்து கொள்வதற்கு அமைச்சர் பொறுப்பு போல எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. இந்த நிலையில் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல முடியும்.. இன்றைய அரசியல் என்பது மறைந்த இந்திரா அம்மையார் மற்றும் அவரது மகன் ராஜிவ் காலத்தை விட வேறான ஒன்று என்பதுதான் அது.

தமிழக பாஜக கூட்டணி பற்றி..

தமிழக பாஜக கூட்டணி பற்றி..

கேள்வி: பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் கூட்டணியை உருவாக்கியுள்ளது. அந்த கூட்டணிக்கான வாய்ப்புகள் எப்படி?

பதில்: நாங்களும் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்று பாஜக கூறிக் கொள்ளலாம். திமுகவின் 65 ஆண்டுகால பயணத்தில் பல தேர்தல்களை, பல கூட்டணிகளைப் பார்த்துவிட்டோம். மற்ற கூட்டணிகளை விட தமிழகத்தில் எங்கள் கூட்டணியே வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது..

இவ்வாறு மு.க.ஸ்டாலின் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+