இன்னும் ஒரு பங்காளிச் சண்டை.. இந்த முறை வெல்லப் போவது யார்.. அழகிரியா?
மு.க.அழகிரி தொடங்கியிருக்கும் இன்னொரு பங்காளிச் சண்டையில் வெல்லப் போவது யார் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சமாதி நோக்கி, அவரது மகன் மு.க அழகிரி அடுத்த மாதம் 5ம் தேதி அமைதிப் பேரணி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது திமுகவினரிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு சண்டையைத் துவக்கி வைத்திருக்கும் அழகிரி இதிலாவது வெல்வாரா அல்லது மீண்டும் ஸ்டாலினிடம் தோற்றுப் போவாரா என்பது அடுத்து வரும் வாரங்களில் தெளிவாகும்.
திமுகவில் தற்போது அறிவிக்கப்படாத தர்மயுத்தம் நடந்து வருகிறது. அழகிரி - ஸ்டாலின் பங்காளி சண்டையை பார்த்து திமுக நிர்வாகிகள் கலங்கி போய் இருக்கிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில், எனக்கு ஆதங்கம் இருக்கிறது, திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று அழகிரி குறிப்பிட்டார். இதையடுத்து தற்போது பெரிய திட்டம் ஒன்றை மனதில் வைத்து செயல்பட்டுக் கொண்டு இருப்பதாக மதுரை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

பேரணி
அழகிரி மெரினாவில் கொடுத்த பேட்டிக்கு பின், ''இன்னும் மூன்று நாட்களில் என்னுடைய ஆதங்கத்தை தெரிவிப்பேன். திமுகவில் நடக்கும் பிரச்அழகிரி வரும் 05.09.2018 அன்று சென்னையில் அமைதி ஊர்வலம் நடத்த உள்ளார். அண்ணா சாலையில் இருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதி வரை நடந்து சென்று ஊர்வலம் நடத்த இருக்கிறார். இது அவர் திமுக தலைமைக்கு நேரடியாக விடும் அறைகூவலாக இருக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். னையை தெரிவிக்க போகிறேன்'' என்று குறிப்பிட்டார். ஆனால் அந்த பேட்டி வெளியாகி நான்கு நாட்கள் ஆன பின்பும் கூட அழகிரி எந்த விதமான அறிவிப்பும் வெளியிடாமல் அமைதியானார்.

1 லட்சம் பேரை கூட்ட போகிறார்
இதற்காக அவரது தொண்டர்படை தயாராகிக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. 1 லட்சம் தொண்டர்களை தென்மாவட்டத்தில் இருந்து இறக்க இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். சென்னையில் அழகிரியின் ஆதரவாளர்கள் 1 லட்சம் பேர் நடந்து சென்றால், அது திமுக தலைமையை அதிர வைக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

கூட்ட போகிறார்
இந்த பேரணியை முடித்தவுடன் அழகிரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. அது என்ன என்பதுதான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை கைப்பற்றும் அறிவிப்பா அல்லது தனிக் கட்சியா என்பது தெரியவில்லை.

பங்காளிச் சண்டை
அழகிரி - ஸ்டாலின் சண்டை நீண்ட காலமாக உள்ளது. ஆனால் இது உச்சகட்டத்தை எட்டியது திருமங்கலம் இடைத் தேர்தல் திமுக வெற்றிக்குப் பிறகுதான். அதுவரை கட்சியில் பதவியே இல்லாமல் இருந்து வந்தவர் அழகிரி. ஆனால் இந்த வெற்றியின் மூலம் அவருக்கு பதவி தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. வேறு வழியில்லாமல் தென் மண்டல திமுக அமைப்பாளர் பதவி அவருக்கு தரப்பட்டது. அடுத்தடுத்து வேகமாக உயரத் தொடங்கினார் அழகிரி. மத்திய அமைச்சராகவும் அவர் அமர்ந்தபோது ஸ்டாலின் தரப்பு மிரண்டே போனது.

ஸ்டாலினுக்கே வெற்றி
தொடர்ந்து அழகிரி இது போல மெல்ல மெல்ல உயர்ந்து வந்தாலும் கூட கட்சியின் தலைமைப் பதவிக்குப் பக்கத்தில் கூட அவரால் வர முடியவில்லை. மிரட்ட முடிந்தது, பயமுறுத்த முடிந்தது. ஆனால் பதவி பக்கம் வர முடியவில்லை. காரணம், திமுக தலைவர் கருணாநிதியின் முழு ஆதரவும் ஸ்டாலினுக்கே இருந்ததால். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது.

நடக்கப் போவது என்ன
தற்போது கருணாநிதி மறைந்து விட்டார். எனவே ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மோதிப் பார்த்து விட அழகிரி முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. அவர் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. அவரது பிளான் என்ன என்பதும் யாருக்கும் தெரியவில்லை. அவரை யாராவது இயக்குகிறார்களா என்றும் புரியவில்லை. அழகிரி கட்சி தொடங்க போகிறாரா என்றும் தெரியவில்லை. இதுவரையிலான போட்டியில் ஸ்டாலின் வென்று இருக்கிறார். ஆனால் தற்போது அழகிரி தொடங்கப் போகும் போரில் வெல்லப் போவது யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.
-
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications