அனைத்து தலைவர்களுக்கும் போல ஜெ.வுக்கும் கல்யாண பத்திரிகையா?: மு.க. ஸ்டாலின் விளக்கம்
சென்னை: அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தமது தம்பி மகன் கல்யாண பத்திரிகையை கொடுத்தது போல அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவையும் நேரில் சந்தித்து கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், யோசிக்கலாம் என பதிலளித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது சகோதரர் மகனின் திருமண அழைப்பிதழை பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் இல்லத்துக்கு ஸ்டாலின் முதன் முறையாக சென்றார். அங்கு ஸ்டாலினை வரவேற்றார் ராமதாஸ்.

தன் சகோதரர் மகன் திருமண அழைப்பிதழை ராமதாஸிடம் அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், வடநாட்டில் நிலவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பண்பாட்டை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து அழைத்து வருகிறோம் என்றார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, முதலில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கட்டும். அதன் பின்னர் திமுக உயர்மட்ட குழு கூடி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும் என்றார்.
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நேரில் திருமண அழைப்பிதழ் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வரா? மக்கள் முதல்வரா? என திருப்பி கேட்டுவிட்டு முதலில் அவர் தன் கட்சிக்காரர்களை சந்திக்கட்டும். அதன் பிறகு யோசிக்கலாம் என்றார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications