அலங்காநல்லூருக்கு நள்ளிரவு வந்து இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் கருணாஸ் எம்எல்ஏ!
அலங்காநல்லூரில் போராடி வரும் இளைஞர்களுக்கு நள்ளிரவில் வந்து நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் ஆதரவு தெரிவித்தார்.
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி நள்ளிரவை தாண்டியும் அமைதிப் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களை நடிகர் கருணாஸ் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் மையமாக அலங்காநல்லூர் உருவெடுத்துள்ளது. அலங்காநல்லூரில் திங்கள்கிழமை காலை முதலே அமைதி வழி போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்தனர்.

இப்போராட்டம் நள்ளிரவை தாண்டியும் செவ்வாய்க்கிழமையும் அதிகாலையும் தொடர்ந்தது. இளைஞர்களுக்கு ஆதரவாக கிராம மக்களும் கை கோர்த்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் இளைஞர்களின் போர்க்களமாக இருக்கிறது. அங்கேயே உர சாக்குகளிலும் தரையிலும் படுத்து இளைஞர் படை கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடும் என படுத்துக் கொண்டிருக்கிறது.
இதனிடையே நள்ளிரவில் நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் போராட்ட களத்துக்கு நேரில் வந்து இளைஞர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, இளைஞர்களின் உணர்வை ஒரு தமிழனாக, மண்ணின் மைந்தனாக பாராட்டுகிறேன் என கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications