பெட்டி வச்சு கருத்து கேட்ட தமிமுன் அன்சாரி கூட இப்படி பண்ணிட்டாரே... கொதிக்கும் மக்கள்
மக்களின் கருத்தைக் கேட்டு வாக்களிப்பேன் என்ற தமிமுன் அன்சாரியும் சசிகலா தரப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
நாகை: மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏவான தமிமுன் அன்சாரி மக்களின் கருத்தைக் கேட்டு வாக்களிக்கப் போவதாக தெரிவித்தார். ஆனால் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் சசிகலா தரப்புக்கே வாக்களித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏவான தமிமுன் அன்சாரி கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சி சசிகலா குரூப்பின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதால் கட்சி விவகாரங்களில் தலையிடாமல் இருந்தார்.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறைவைத்த சசி குரூப் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரியை கண்டுக்காமல் இருந்தது. இதையடுத்து அண்மையில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து தமிமுன் அன்சாரி தனது அலுவலகத்தில் வாக்குப் பெட்டியை வைத்து கருத்துக்கேட்டார்.

பாராட்டப்பட்ட தமிமுன் அன்சாரி
விண்ணப்பங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோதே அந்த செய்தி தீயாக பரவியது. சமூக வலைதளங்களிலும் மக்கள் அவரின் நடவடிக்கை பாராட்டு தெரிவித்தனர்.

அன்றே வெளியான செய்தி
மக்களின் கருத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு செல்போனில் திடீரென ஒரு அழைப்பு வந்தது. இதையடுத்து கருத்துக் கேட்பை பாதியில் நிறுத்திய தமிமுன், அங்கிருந்து விறுவிறுவென ஆட்டோவில் ஏறிச்சென்றதாக அன்றே செய்தி வெளியானது.

சசிகலா தரப்புக்கு ஆதரவு
இந்நிலையில் நேற்று எடப்பாடி அமைச்சரவை மீது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தமிமுன் அன்சாரி சசிகலா தரப்புக்கே ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளார்.

சசிகலா தரப்பின் மிரட்டல்
மக்களின் விருப்பப்படி வாக்களிப்பேன் என்று கூறியவர் திடீரென எப்படி மக்களின் விருப்பத்திற்கு எதிராக வாக்களித்தார் என மக்கள் கொதித்துள்ளனர். சசிகலா தரப்பின் மிரட்டலே தமிமுன் அன்சாரி மக்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு ஆதரவாகவும் வாக்களித்தற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications