தினகரன் தரப்பு விறுவிறு வாதம்.. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணையை 3-ஆவது நீதிபதி தொடங்குகிறார்.
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணையை 3-ஆவது நீதிபதி சத்யநாராயணா நடத்தினார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளையும் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. முதலில் டிடிவி தினகரன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இதையடுத்து வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கில் தீர்ப்பு
இந்த வழக்கில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் தீர்ப்பை வழங்கினர். இதில் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதியிடம் சென்றது.

உச்சநீதிமன்றம்
3-ஆவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து 17 எம்எல்ஏக்களும் (தங்கதமிழ்ச்செல்வன் தவிர்த்து) உச்சநீதிமன்றத்தை அணுகினர். உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்தக்கு மாற்றக் கோரியும் மூன்றாவது நீதிபதியை மாற்றக் கோரியும் வழக்கு தொடர்ந்தர். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணாவை நியமனம் செய்தது.

ஜூலை 4-இல் விசாரணை
இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக சத்யநாராயணா இன்று விசாரணையை தொடங்கினார். முதலில் டிடிவி தினகரன் தரப்பு தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு இந்த விசாரணை நடைபெறுகிறது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணை
இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக சத்யநாராயணா இன்று விசாரணையை நடத்தினார். இன்று முதல் 5 நாட்களுக்கு இந்த விசாரணை நடைபெறுகிறது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பில் இன்று வாதம் நடைபெற்றது. சபாநாயகர் முடிவு ஒருதலைப்பட்சமானது என வாதம் நடந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications