மனித நேய மக்கள் கட்சிக்கு உளுந்தூர்பேட்டை, ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர் தொகுதிகள்!
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி உளுந்தூர்பேட்டை, ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இணைந்துள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று மாலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து இன்று மாலை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போது
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, உளுந்தூர்பேட்டை, ராமநாதபுரம், ஆம்பூர், நாகப்பட்டினம், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகள் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications