என்னை தப்பாக எடை போட்றாதீங்க.. கமல் எச்சரிக்கை
தமிழ் மரபணுவை மாற்றும் யாருடனும் கூட்டணி இல்லை என கமல் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ் மரபணுவை மாற்றும் யாருடனும் நான் கூட்டணி சேரமாட்டேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் கல்விக் குழும நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கமல் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சிறுபிள்ளை இல்லை
நான் ஆற்றாமையினால் அரசியலுக்கு வரவில்லை, ஆற்ற முடியும் என்ற நம்பிக்கையில் வந்தவன். அரசியலில் நான் 8 மாத குழந்தைதான். அதற்காக என்னை யாரும் சிறுபிள்ளை என நினைத்து எடை போட்டு விடாதீர்கள்.
[கருணாஸுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா.. நாளை தெரியும் ]

நான் கழுகு
நானும், எனது கொடியும் பறவையாக பறக்கிறோம். மக்களுக்காக பறந்து கொண்டிருக்கிறேன். வேட்டையாடி விளையாடுவது அல்ல என்னுடைய வேலை. நான் கோழிக்குஞ்சுகளுடன் நடக்கும் கழுகு. நான் கழுகு என்பதை மக்கள் தான் சொல்லிக் கொடுத்தார்கள்.

யாருடன் கூட்டணி?
என்னை வழியனுப்பும் தமிழகம் வேறு விதமாக இருக்க வேண்டும். இதை மாற்றும் சக்தி இளைஞர்களிடம் தான் இருக்கிறது. தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் யாருடனும் கூட்டணி கிடையாது.

பின்னோக்கி உள்ளோம்
தமிழகத்திற்கு என தனித்துவ மரபணு இருக்கிறது. தமிழகம் 40 வருடம் பின்னோக்கி இருக்கிறது. இவ்வாறு கமல் பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications