கருணாஸுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா.. நாளை தெரியும்
கருணாசுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்று நாளை விசாரணையில் தெரியவரும்.
மதுரை: முன் ஜாமீன் கோரி கருணாஸ், மனு தாக்கல் தாக்கல் செய்துள்ள நிலையில், அவருக்கு நாளை ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
முதலாவதாக, முதல்வரையும், காவல்துறை அதிகாரியையும் அவதூறாக பேசியதாக நுங்கம்பாக்கம் போலீசார் கருணாசை கைது செய்தனர்.

நிபந்தனை ஜாமீன்
இரண்டாவதாக, சேப்பாக்கத்தில் போராடியதற்காக திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். இந்த இரண்டு வழக்குகளிலும் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கருணாசும் வேலூர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தார்.

வீடு பூட்டி இருந்தது
மூன்றாவதாக, புளியங்குடியில் போன வருஷம் செப்டம்பர் 1-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 302-வது பிறந்த நாள் விழாவில் தேவர் பேரவை தலைவரின் கார் கண்ணாடியை உடைத்ததற்காக திரும்பவும் கைது என்ற தகவல் வந்தது. போலீசார் கைது செய்ய வீட்டுக்கு போனால் கருணாஸ் அங்கு இல்லை. வீடு பூட்டி இருந்தது.

சாதாரண வார்டு
விடிகாலையிலேயே கருணாசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வடபழனியில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கருணாஸ் தற்போது தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார்.

நாளை தெரிய வரும்
மருத்துவமனையிலேயே கருணாஸ் அனுமதிக்கப்பட்டாலும், புளியங்குடி வழக்கில் கைது ஆகாமல் இருக்க மதுரை கோர்ட்டில் முன் ஜாமீன் கோரினார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றமும், நாளை அதாவது 8-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான் கருணாசுக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியவரும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications