காற்றழுத்தம் புயலாக மாறும்.. மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மைய இயக்குனர் பேட்டி!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை: வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு இருக்கும் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழத்தில், வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து வருகிறது. வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.

வெப்பசலனமும் இந்த மழைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி அளித்துள்ளார். தமிழக மழை நிலவரம் குறித்த விவரங்களை அவர் வெளியிட்டார்.
[அவசரமாக கொடுக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட ரெட் அலெர்ட்.. என்ன காரணம்.. உள்நோக்கம் இருக்கிறதா? ]
அதில், தமிழகத்தில் அதிகமாக புதுக்கோட்டை மீமிசலில் 13 செமீ மழை பெய்துள்ளது. தற்போது வங்கடலில் நிலவும் காற்றழுத்தம் புயலாக மாறும். காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறும்.
இந்த மண்டலம் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும். இந்த புயல் ஓமன் கரையை நோக்கி நகரும். இந்த சமயத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யும். இன்றில் இருந்து 12ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
கடல் அடுத்த சில நாட்களுக்கு கொந்தளிப்பாக காணப்பட வாய்ப்புள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications