சென்னை, ஓசூரில் மோடி இன்று சூறாவளிப் பிரச்சாரம்
சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை, ஓசூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சில குட்டிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பும் மோடி மதியம் 1.15 மணிக்கு கோவை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் அவர் அங்கு நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் கோவை வரும் அவர் மாலை 4.15 மணிக்கு விமானம் மூலம் பெங்களூர் செல்கிறார். பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஓசூர் வந்து அங்கு நடக்கும் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். கூட்டம் முடிந்த பிறகு ஹெலிகாப்டரில் பெங்களூர் செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானத்தில் மாலை 6.30 மணிக்கு சென்னை வருகிறார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களான தமிழிசை சவுந்தரராஜன், ஹெச். ராஜா உள்ளிட்டோரை ஆதரித்து பேசுகிறார். இரவு 8.30 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்புகிறார்.
மீண்டும் அவர் 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications