நெசவாளர் தினமெல்லாம் ச்சும்மா பேச்சு.. ஜெயலலிதாவை பார்க்கத்தான் மோடி வந்தார்: ப.சிதம்பரம்
சென்னை: ஜெயலலிதாவை பார்ப்பதற்காக நெசவாளர் தினத்தை நரேந்திரமோடி ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சென்னை வந்தார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கைத்தறி நெசவாளர்கள் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். இதற்காக நேற்று காலை 7.45 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு காலை 10.30 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில், பிரதமர் நரேந்திரமோடியை தமிழக கவர்னர் கே.ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சீனியர் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதன்பிறகு, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த கைத்தறி நெசவாளர்கள் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர், தேசிய கைத்தறி தினத்தை அறிவித்தார். நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அங்கு நடைபெறும் கைத்தறி நெசவாளர்கள் கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு 45 நிமிடம் அங்கு இருந்த மோடி, டெல்லி கிளம்பி சென்றார். முன்னதாக, தமிழக நலன்சார்ந்த நிலுவை கோரிக்கைகள் அடங்கிய மனுவை மோடியிடம் ஜெயலலிதா கொடுத்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிதம்பரம், "ஜெயலலிதாவை சந்திக்கும் நோக்கத்துடன்தான் மோடி சென்னை வந்தார். கைத்தறி நிகழ்ச்சி அதற்கு ஒரு சாக்கு மட்டுமே. மோடி ஒரு ஜோதிடக்காரராக மாறிவிட்டார். எப்போதும், நல்லகாலம் பிறக்கப்போகுது என்பதை மட்டுமே அவர் சொல்லி வருகிறார்" என்று சிதம்பரம் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications