கேப்டன்ஜி, ஹேப்பி தமிழ் நியூ இயர்... விஜயகாந்த், பிரேமலதாவை போனில் வாழ்த்திய மோடி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் தனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சென்னை பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி. அதற்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை அவர் சந்தித்துப் பேசினார். ஆனால், உடல்நிலை சரியில்லாததால் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு சென்னையில் இருந்த விஜயகாந்தை அவர் சந்திக்கவில்லை. இதனால் விஜயகாந்த் மனவருத்தத்தில் இருப்பதாகச் சொல்லப் பட்டது.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது தேமுதிக. மோடியை பிரதமராக்குங்கள் என தனது பிரச்சாரக் கூட்டங்களில் முழங்கி வருகிறார் விஜயகாந்த். இந்நிலையில் விஜயகாந்தை மோடி சந்திக்காததும், மோடி கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்காததும் கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கி விட்டதாகச் சொல்லப் பட்டது.

இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மோடி, விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததாக தேமுதிக அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வரும் விஜயகாந்த், பிரேமலதாவின் முயற்சிகள் வெற்றிபெற மோடி வாழ்த்தியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாளை சேலத்தில் நடைபெற உள்ள பிரச்சாரக் கூட்டத்தில் மோடியுடன் விஜயகாந்த் பங்கேற்பார் என பாஜக தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications