ஜெ. மீது மோடிக்கு அக்கறை உண்டு… உங்க வேலையைப் பாருங்க.. திருநாவுக்கரசருக்கு தமிழிசை பதிலடி
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மோடிக்கு அக்கறை உண்டு என்றும் அதுபற்றி தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கவலைப்படாமல் கட்சி வேலையை பார்க்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவின் நலம் குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அப்போலோ வந்து செல்கின்றனர். இதனிடையே, முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து, தூய்மை இந்தியா திட்டத்திற்காக குப்பைகளை அகற்ற சென்னை ராயப்பேட்டை பகுதிக்கு வந்த பாஜக தலைவர் தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தமிழிசை, திருநாவுக்கரசர் அவருடைய கட்சி வேலை பார்க்க சொல்லுங்கள் என்றும், ஜெயலலிதாவை பிரதமர் மோடி பார்க்க வரவில்லை எனக் கூறி திருநாவுக்கரசர் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கோபமாக கூறினார். மேலும், டெல்லியில் இருந்து அமித் ஷா, அருண் ஜெட்லி எல்லாம் வந்து சென்றுள்ளார்கள் என்றும் முதல்வரின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை உண்டு என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications