நரேந்திர மோடி பொதுக்கூட்டம் வண்டலூரில் 8 ஆயிரம் போலீசாருடன் 7 அடுக்கு பாதுகாப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடியின் சென்னை பொதுக்கூட்டத்துக்கு 7 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டது.

சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இந் நிலையில் குஜராத் காவல்துறையினர் உட்பட 8000 காவலர்கள் மோடி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

கண்காணிப்பு கேமராக்கள்

நகரின் முக்கிய இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கிண்டி, தி.நகர், தாம்பரம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்களை சோதனை செய்த பின்னரே காவல்துறையினர் அனுமதித்தனர்.

மேலும், சென்னை விமான நிலையத்தைச் சுற்றிலும் 5 அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டது. ஆயுதம் ஏந்திய காவலர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்தில் மாற்றம்

போக்குவரத்தில் மாற்றம்

நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு சென்னை, வண்டலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மதுரவாயல் வழியாக ஜி.எஸ்.டி. சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மதுரவாயலில் தடை செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் படப்பை, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலைக்கு திருப்பிவிடப்பட்டன.

செங்கல்பட்டு பேருந்துகள்

செங்கல்பட்டு பேருந்துகள்

ஜி.எஸ்.டி. சாலை வழியாக ஊரப்பாக்கம் மற்றும் சிங்கபெருமாள் கோயில் நோக்கி செல்லும் வாகனங்கள் பெருங்களத்தூர் வழியாக திருப்பி விடப்பட்டன. செங்கல்பட்டு நோக்கி சென்ற பேருந்துகள் கொளப்பாக்கம், கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக சென்றன.

போலீஸ் கட்டுப்பாட்டில்...

போலீஸ் கட்டுப்பாட்டில்...

பழைய விமான நிலையம், வண்டலூர் பொதுக்கூட்ட மேடை, இரவு தங்கும் சோழா ஓட்டல், மறுநாள் அவர் விழாவில் பங்கேற்க உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஆகிய 4 இடங்களும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

தீவிரவாத கண்காணிப்பு

தீவிரவாத கண்காணிப்பு

கடந்த அக்டோபர் மாதம் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தப்பிய 6 தீவிரவாதிகள் மற்றும் சிமி தீவிரவாதிகள் இருவரின் புகைப்படங்களை குஜராத் போலீஸார் தமிழக போலீஸாருக்கு அனுப்பி உள்ளனர். அந்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு தமிழக போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

குஜராத் போலீசார்

குஜராத் போலீசார்

குஜராத் ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் தலைமையில் குஜராத் போலீஸார் சென்னை வந்துள்ளனர். மோடியை சுற்றி குஜராத் போலீஸாரே முதல் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+