ஆர்.கே. நகர் மக்களுக்கு காசு... பணம்... துட்டு... மணி... மணி... இனி பஞ்சமில்லை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கிருஸ்துமஸ், புத்தாண்டு செலவுக்கு பஞ்சமிருக்காது.
Recommended Video

சென்னை: காசு... பணம்... துட்டு... மணி... மணி... என இப்போதே பாட ஆரம்பித்து விட்டனர் ஆர்.கே.நகர் வாசிகள். காரணம் ஆர்.கே. நகருக்கு இன்னும் சில வாரங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதிமுக பிளவுபட்டிருந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனால் அதிமுக அம்மா அணி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் அவர் இரட்டை மின்கம்பம் சின்னத்தில் போட்டியிட்டார்.

வருமானவரி சோதனை
அதிமுக அம்மா அணி சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் 89 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக ஆதாரங்கள் சிக்கின.

இணைந்த அணிகள்
இதனையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இரட்டை இலை முடக்கப்பட்டிருந்த நிலையில் அதிமுகவின் பிளவுபட்டிருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. சின்னத்தையும், கட்சியையும் மீட்க போராடின. டிடிவி தினகரன் சார்பில் முட்டுக்கட்டை போடப்பட்டது.

தேர்தல் ஆணையம் தீர்ப்பு
எனினும் ஓருங்கிணைந்த மதுசூதனன் தலைமையிலான அதிமுகவிற்கே இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கட்சி, சின்னம், கொடி ஆகியவைகளை முதல்வர் தலைமையிலான அணியினர் பயன்படுத்தலாம் என உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்.

டிசம்பர் 21 இடைத்தேர்தல்
இந்த தீர்ப்பு வெளியான 24 மணிநேரத்திற்குள்ளாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செலவுக்கு பஞ்சமிருக்காது
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இப்போதே உற்சாகமடைந்துள்ளனர் ஆர்.கே. நகர்வாசிகள். கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்ட செலவிற்கு இந்த ஆண்டு பஞ்சமிருக்காது என்று இப்போதே மீம்ஸ்கள் களைகட்டி வருகின்றன. அப்போ காசு... பணம்... துட்டு...மணி... மணிதான்... பணமழை பொழியுமா? என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications