ஃபேஸ்புக் நட்பால் விபரீதம்... டீன் ஏஜ் பெண்களை கண்காணியுங்கள் பெற்றோர்களே!
ஃபேஸ்புக்கில் யாருடன் நட்பாக இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை டீன் ஏஜ் பெண்களை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
Recommended Video

சென்னை: ஃபேஸ்புக் நட்பு வளரிளம் பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளது. இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி சூறையாடும் கும்பல் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் உள்ள பெரியமேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி, 4 ஆண்டுகளுக்கு முன் ஃபேஸ்புக்கில் மோனி என்பவருடன் நண்பராகி உள்ளார்.
அவ்வப்போது நேரில் சந்தித்துள்ளனர். அவர்கள் நேரில் சந்தித்த போது எடுத்த வீடியோவை வைத்து, அந்தச் சிறுமியை மிரட்டி நான்கு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமியை மிரட்டிய நபர்
பலமுறை இதை காரணம் கட்டி அந்தச் சிறுமியிடமிருந்து பல லட்சம் ரூபாயை மிரட்டி வாங்கியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ரவீந்தர் என்பவரும் அந்தச் சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கர்ப்பமான சிறுமி
அந்தச் சிறுமி கர்ப்பமாகியதால் அவர்கள் இருவரிடமும் தெரிவித்துள்ளார். கருவைக் கலைக்க 5 லட்சம் கொண்டு வரும்படி கூறியுள்ளனர். அந்தச் சிறுமி இந்தச் சம்பவம் பற்றி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை அறிந்த பெற்றோர் பாலியல் வன்கொடுமை செய்த இருவர் மீதும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை சட்டம்
இந்தப் புகாரின் அடிப்படையில் மோனி மற்றும் ரவீந்தர் இருவர் மீதும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான குழந்தை பாதுகாப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதுபோல எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

மிரட்டும் கும்பல்
சமூக விரோதிகள் விரிக்கும் வலையில் சிக்கி சிறுமிகள், இளம் பெண்களும், குடும்ப பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். குடும்ப கவுரவம், சமூக அந்தஸ்து இவற்றை கருதி மிரட்டல் பேர் வழிகள் கேட்கும் பணத்தை, பொருளை கொடுத்து, வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர்.

சிறுமிக்கு இ மெயில்
சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் பிரபல பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கிறாள். இந்த வயதிலேயே இன்டர் நெட்டில் இவள் புகுந்து விளையாடுவதை பார்த்து இவளது பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.

நாசமாக்கிய நட்பு வட்டம்
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவளது இ-மெயிலுக்கு உனது நட்பு தேவை என்று மெசேஜ் வந்தது. அதனுடன் அதை அனுப்பி இருந்தவர், தானும் ஒரு பள்ளி மாணவி என்றும், பள்ளியில் ஒன்றாக படித்தவள் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி ஆன்-லைனில் பேசிக் கொண்டனர்.

கண்காணிக்காத பெற்றோர்
நைசாக பேசி சிறுமியை சில நடவடிக்கைகளுக்கு அவர் உட்படுத்தினார் வெப்-கேமரா முன்பு தனது அங்கங்களை காட்டினாள். இதை விளையாட்டாகவே அபி நினைத்தாள். ஆனால், இவளது செய்கைகள் அனைத்தும் வெப்- காமிராவில் படம் பிடிக்கப்பட்டு, எதிர் முனையில் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை அபி தன் பெற்றோரிடம் சொல்லவும் இல்லை, மகளின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்கவும் கிடையாது.

ஆபாச வீடியோ மிரட்டல்
3 மாதங்கள் கடந்த நிலையில், அபியின் தந்தைக்கு மிரட்டல் இ- மெயில் வந்தது. அதில் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லை எனில் அபியின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் போட்டு விடுவேன். போலீசுக்கு போனால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகும் என மிரட்டினர். இதனையடுத்து தனியார் துப்பறியும் நிறுவனத்தின் மூலம் அந்த குற்றவாளிகளை பிடித்தார் அந்த தொழிலதிபர்.

பெற்றோர் கண்காணிப்பு
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் உலக அளவில் ஏராளமான மக்களை ஒன்றிணைப்பதாக ஒருபுறம் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் ஆனால் குழந்தைககள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க தவறிவிடுகிறோம். குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications