பிரண்டு.. லவ் மேட்டரு.. பீல் ஆயிட்டாப்ல.. இப்படியெல்லாம் டி சர்ட் வந்துருச்சுங்க!
சென்னை: தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க, தூ வரிசையில் இப்போது டி சர்ட் ரகங்களில் புதிய வகை ஒன்று வெளி வந்துள்ளது. விதம் விதமான ரகளை வாசகங்களுடன் இந்த டிசர்ட்களை ஆன்லைனில் விற்க ஆரம்பித்துள்ளனர்.
முன்பு மாதிரி டிசர்ட் இப்போது வருவதில்லை. லேட்டஸ்ட் பரபரப்புகளை அப்படியே டிசர்ட்களில் ஏற்றி விடுவதுதான் டிரெண்ட் ஆக மாறியுள்ளது.
மக்களிடையே பாப்புலரான வாசகனங்களை டிசர்ட் வாசகமாக்கி விற்க ஆரம்பித்துள்ளனர் இப்போதைய டிசர்ட் உற்பத்தியாளர்கள்.

தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க
முன்பு இப்படித்தான் விஜயகாந்த் செய்தியாளர்களைப் பார்த்துக் கோபமாக சொன்ன தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க என்ற கோப வார்த்தையைப் போட்டு டிசர்ட் வந்தது.

தூ
அதேபோல சென்னையில் ஒரு செய்தியாளரைப் பார்த்து தூ என்று அவர் துப்பியதையும் டிசர்ட்டில் போட்டு விற்றனர்.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
இப்போது அதேபோல மேலும் சில டி சர்ட்கள் வந்துள்ளன. அதில் ஒன்று என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா. ஒரு ஒரு டிவி ஷோவில் லட்சுமி ராமகிருஷ்ணன் உபயோகித்த வார்த்தையாகும்.

பிரண்டு.. லவ் மேட்டரு.. பீல் ஆயிட்டாப்ல
அதேபோல இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் பிரண்டு லவ் மேட்டரு, பீல் ஆயிட்டாப்ல வசனத்தையும் ஒரு டிசர்ட்டில் ஏற்றி உலா விட்டுள்ளனர்.

வி்ர்ஜின் பசங்க சாபம்
அடுத்து ஒரு டிசர்ட்.. கன்னிப் பசங்க சாபம் சும்மா விடாது என்று போட்டு பெண்களை பீதிக்குள்ளாக்குகிறது இது.
இன்னும் என்னெல்லாம் வரப் போகுதோ...!












Click it and Unblock the Notifications