2ஆவது திருமணம் செய்தும் நிம்மதியில்லை! திருச்செந்தூர் சென்ற அம்பிகா- மாலினி எடுத்த விபரீத முடிவு!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் தனியார் விடுதியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் எதற்காக தற்கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் முடக்குளத்தைச் சேர்ந்தவர் மோகனன் நாயர். இவரது மனைவி அம்பிகா (68). இவர்களுக்கு மாலினி (40) என்ற மகள் உள்ளார்.

மாலினிக்கும் கேரளாவை சேர்ந்த மகேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணமானது. திருமணமான சில நாட்கள் மகிழ்ச்சியாக போன வாழ்வில் திடீரென புயல் வீசத் தொடங்கியது.
தகராறு
கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது போன்ற குடும்ப பிரச்சினை நீடித்து வந்ததால் வாழ்க்கையில் நிம்மதியையும் தொலைத்து விட்டனர். இதையடுத்து இவர்களது உறவினர்கள் இருவருக்கும் அறிவுறுத்தல்களை கொடுத்தனர்.
சண்டை சச்சரவு
மேலும் சண்டை சச்சரவு இல்லாமல் விட்டுக் கொடுத்து சேர்ந்து வாழவும் கேட்டுக் கொண்டனர். ஆனாலும் இவர்கள் கேட்கவில்லை. இப்படியே இருந்தால் சொந்தக்காரர்கள் அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்கள் என கருதிய இவர்கள், விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு சென்ற நிலையில் இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது.
குழந்தை இல்லை
கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த உதயசிம்மன் என்பவரை மாலினிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் மாலினி மனவேதனை அடைந்ததாக சொல்லப்படுகிறது.
செந்திலாண்டவர்
2 ஆண்டுகள்தான் ஆனது, ஆனாலும் அக்கம்பக்கத்தினரின் வாயை அடைக்க முடியவில்லை. இதனால் மாலினி, தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து குழந்தை வரம் கேட்டு திருச்செந்தூர் செந்திலாண்டவரை வேண்டிக் கொள்ள தாய் அம்பிகாவும் மாலினியும் முடிவு செய்தனர்.
கோயில்
அதன்படி தனது மகன் மணிகண்டனிடம், கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு தனது மகளுடன் அம்பிகா சென்றார். பின்னர் அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், உறவினர்கள் வீடுகளில் தேடி உள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.
பகத்சிங்
திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் எதிரே உள்ள லாட்ஜில் தாயும் மகளும் தங்கியிருந்தது தெரியவந்தது. அங்கு அவர்கள் இருவரும் குளிர்பானத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து குடித்தனர்.
உடல்நிலை மோசம்
பின்னர் உடல்நிலை மோசமடையவே அம்பிகா, விடுதி ஊழியருக்கு தகவல் தெரிவித்தாராம். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை
அங்கு சிகிச்சை பலனில்லாமல் அம்பிகா உயிரிழந்தார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மாலினியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் இறந்துவிட்டார். இதையடுத்து திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications