Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு தாய் செய்யற வேலையா இது!... இப்படி செய்ய எப்படித்தான் மனம் வருதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தகாத உறவுக்கு மகளை அழைத்து தொந்தரவு கொடுத்ததாக சென்னையில் அவரது தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் மணி (45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தொழிலதிபரான இவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் பழம்பெரும் சினிமா பட இயக்குநரின் குடும்பத்தை சேர்ந்தவர். எனது உறவினர் ஒருவர் காவல் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இத்தகைய குடும்பத்தில் ஒரு திடுக் சம்பவம் நடந்துவிட்டது.

[ ஆன் தி ஸ்பாட் அம்பலப்படுத்துங்கள்.. மீடூ வரும் வரை காத்திருக்காதீர்கள்! ]

விசாரித்த போது

விசாரித்த போது

சென்னையில் ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் எனது 14 வயது நிரம்பிய மகள் திடுக் தகவலை என்னிடம் கூறினார். முதலில் அதிர்ச்சியாக இருந்த எனக்கு விசாரித்த போது உண்மை என்று தெரியவந்தது.

உடந்தை

உடந்தை

14 வயது மகளிடம் என் மனைவியே தகாத உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த எனது மகளை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதற்கு என் மனைவியின் தாயும் உடந்தையாக இருந்ததும் பேரதிர்ச்சியாக உள்ளது.

சட்ட நடவடிக்கை தேவை

சட்ட நடவடிக்கை தேவை

நான் எவ்வளவு சொல்லியும் மனைவியும் அவரது தாயும் திருந்தவில்லை. என் மகளுக்கு தொல்லை கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். மகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

கைது

கைது

இதையடுத்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் இருவரும் கும்பகோணத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கும்பகோணம் விரைந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

வேலியே பயிரை மேய்வது போல் தாயே மகளை பாழும் கிணற்றில் தள்ளிவிட முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+