பச்சிளம் குழந்தையை வீட்டிற்குள் புதைத்து விட்டு கடத்தல் நாடகம் ஆடிய தாய்
தாராபுரம்: தாராபுரத்தில், பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை வீட்டிற்குள் புதைத்து விட்டு, காணவில்லை என தாயே கடத்தல் நாடகம் ஆடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மனைவி ஷகிலா பேகம். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இத்தம்பதிகளுக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்னர் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 15-ந் தேதி மதியம் வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த தன் குழந்தையைக் காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையின் போது, ஷகிலா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் உண்டானது.
தொடர்ந்து அவரிடம் நடத்தப் பட்ட விசாரணையில் ஷகிலா பல அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதில், குழந்தைக்கு பால் குடிக்கும் போது புரை ஏற்பட்டதாகவும், அதில் மூச்சுத் திணறல் உண்டாகி குழந்தை இறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தை இறந்த செய்தி அறிந்தால் கணவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சி, குழந்தையை வீட்டின் பின்புறத்தில் புதைத்ததையும், பின்னர் குழந்தை காணவில்லை என கடத்தல் நாட்கம் ஆடியதையும் ஷகிலா ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து குழந்தையை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார் ஷகிலா.
குழந்தை இறந்து 4 தினங்களுக்கு மேலாகி விட்டதால், அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. புரையேறி குழந்தை இறந்ததா அல்லது கொலை செய்யப்பட்டதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தெரிந்துவிடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications