2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு தாய் தற்கொலை - திருவள்ளூரில் பயங்கரம்
திருவள்ளூர்: திருவள்ளூரில் இரண்டு குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்தவர் பாபு. இவர் அலமாதியில் உள்ள நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு ரோஷினி என்ற 5 வயது மகளும்,அமலேஷ் என்ற மூன்றரை வயது மகனும் உள்ளனர் இன்று காலை வழக்கம் போல் பாபு வேலைக்கு சென்றுள்ளார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பாபு கதவை தட்டியுள்ளார் .நீண்ட நேரம் ஆகியும்கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 2 குழந்தைகளுடன் லாவண்யாவும் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார் .
இது குறித்து வெங்கல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சடலங்ளைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரது கணவர் பாபுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குடி மற்றும் கடன் தொல்லை எதுவும் இல்லாத போது இரண்டு குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு லாவண்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவில்லை எஎன்று கூறியுள்ளார். தற்கொலைக்கான காரணம் தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!