வனப்பகுதியில் தொட்டில் கட்டி அதில் குழந்தையைப் போட்டுவிட்டு போன தாய்!
நீலகிரி: நீலகிரி வனப்பகுதியில் தொட்டில் கட்டி, அதில், பிறந்த குழந்தையை போட்டுவிட்டு சென்ற தாயை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு ரயில்வே கேட் உள்ளது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்கு சென்று வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, ரயில்வே கேட் அருகிலிருந்து குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டது.

அந்த இடத்தில் பேருந்துக்காக நின்ற பொதுமக்கள் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். முட்புதர்களால் மூடியிருந்த ஒரு மரத்தின் கிளையில், சேலை தொட்டிலாக கட்டப்பட்டிருந்தது. அதில், தொப்புள் கொடி காயாத நிலையில் ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக 108 மருத்துவ உதவி மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைதொடர்ந்து, தொட்டிலில் இருந்த குழந்தையை ஆம்புலன்ஸ் உதவியுடன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். முதலுதவி சிகிச்சைக்கப்பின், அந்தக்குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தொட்டில் கட்டி குழந்தையை போட்டுவிட்டு சென்றது யார் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications