அவசரத்தில் மகனை தவற விட்ட தாய்.. அபாய சங்கிலியை இழுக்கும் முன்பே நின்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரயிலில் ஏறிய அவசரத்தில் தாய், தனது 8 வயது மகனை தவறவிட்டார். மகன் பிளாட்பாரத்தில் அழுது கொண்டிருந்த நிலையில், வேகமாக அபாயசங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயன்றார். அப்போது திடீரென தானாகவே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நின்றது
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சக்கரத்தில் திடீரென பழுது ஏற்பட்டதால் அந்த ரயில் நடுவழிலை லோகோ பைட் சரியான நேரத்தில் கண்டுபிடித்து நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த பிரச்சனையை சரி செய்த பின்னர் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தினமும் மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று மாலை புறப்பட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு மாலை 6.10-க்கு வந்தடைந்தது.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு சுமார் 20 மீட்டர் தூரம் சென்ற போது ரயில் என்ஜினின் அடிப்பகுதியில் இருந்து கம்பிகள் உரசும் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே இதனை கவனித்த ரயிலின் லோகோ பைலைட் (டிரைவர்) சுதாரித்துக் கொண்டு ரயிலை நிறுத்தினார். இதனால் நடுவழியில் ரயில் நின்றது.
பின்னர் என்ஜின் டிரைவர் கீழே இறங்கி ரயில் சக்கரம் பகுதியை ஆய்வு செய்தார். அப்போது என்ஜினில் உள்ள சக்கரத்தில் இணைக்கப்பட்டிருந்த ஸ்பிரிங் சேதமடைந்திருந்தது. இதனால் தான் சத்தம் கேட்டது என்பதை அறிந்த டிரைவர் இதுபற்றி நாகர்கோவில் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் விரைந்தனர். அங்கு பழுது ஏற்பட்ட ஸ்பிரிங்கை ஊழியர்கள் சரி செய்தார்கள். அதன்பின்னர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 20 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் ஸ்பிரிங் பழுதானதை டிரைவர் கவனித்ததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
இது ஒருபுறம் எனில், மதுரையைச் சேர்ந்த ரேவதி என்பவர் தனது 8 வயது மகனுடன் நாகர்கோவிலில் இருந்து நேற்று மதுரை செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். ரேவதியும் அவரது 8 வயது மகனும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக நாகர்கோவில் ரயில்நிலையத்தில் காத்திருந்தனர். ரயில்வந்ததும், முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், கூட்ட நெரிசலில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். அந்த சமயத்தில் முதலில் உடமைகளை எடுத்து கொண்டு ரேவதி ரயிலில் ஏறிவிட்டார்.
ஆனால் இதனை கவனிக்காத 8 வயது மகன் ரயில்நிலைய நடைமேடையிலேயே நின்று கொண்டு தாயை தேடியதோடு கதறி அழுதான். இதற்கிடையே ரயில் புறப்பட்ட பின்னர், ரேவதி தனது மகன் எங்கே? என தேடினார். நடைமேடையில் மகன் நின்று அழுததை கவனித்தார். ஆனால் அவரால் ரயிலில் இருந்து இறங்க முடியவில்லை. பின்னர் அபாய சங்கிலியை பிடித்து இழுக்க முயன்றார். ஆனால் அதற்குள் தானாகவே பழுது காரணமாக ரயில் நின்று விட்டது. ரயில்சக்கரத்தில் ஏற்பட்ட பழுதால் நின்றதால், உடனே ரேவதி ரயிலில் இருந்து கீழே இறங்கி ஓடி சென்று மகனை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியுடன் ரயிலுக்குள் மகனை அழைத்து வந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications