”இன்டெர்நெட் வித்தை தெரிஞ்ச “டெரர்” குட்டி பாப்பா நாந்தானே”
சென்னை: தற்போது பிரபலமாக இருக்கும் எம்.டி.எஸ் நிறுவனத்தின் இன்டர்நெட் இணைப்பிற்கான புதிய விளம்பரம் அனைவரையும் வேகமாக கவர்ந்து வருகிறது.
வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் கூட மிக அட்வான்சாக யோசிக்கும் திறன் கொண்டாதாய் இருக்கும் அவர்களுடைய இன்டெர்நெட் சேவையால் என்று மிக சுவையாக விவரிக்கிறது அந்த விளம்பரம்.

மூக்கை திருகும் குறும்பு பாப்பா:
பிரசவ அறையில் ஒரு பெண் வலியால் துடித்துக்கொண்டிருகிறார். அவரது கணவர் அந்த நிகழ்வை டேப்ளட் சாதனத்தால் பதிவு செய்து கொண்டிருக்கிறார். அப்போது பிரசவம் பார்க்கும் மருத்துவரின் மூக்கை கிள்ளிக்கொண்டே பிறக்கிறது நம்ம எம்.டி.எஸ் பாப்பா.

டேப்ளட்டை குடுப்பா:
உடனே எழுந்து உட்காரும் பாப்பாவை பார்த்து அனைவரும் அதிர்கின்றனர். ஆனால், பாப்பாவோ தனது அப்பாவின் கையில் உள்ள டேப்ளட் சாதனத்தை பிடுங்கி கூகுளில் தொப்புள் கொடியை எப்படி கட் செய்வது என பார்க்கிறது.

ஏ நர்ஸ் கிட்ட வா:
பக்கத்தில் உள்ள நர்ஸை விரலால் சொடுக்குப் போட்டு அழைத்து அவரது கையில் உள்ள கத்திரியை வாங்கி தானே தொப்புள் கொடியை "கட்" செய்கிறது. அவரிடம் தனக்கான உடையை வாங்கி அணிந்து கொள்கிறது.

”இப்போ பிறந்த பாப்பா ” லைக்,கமெண்ட்:
நர்ஸின் பாக்கெட்டில் உள்ள செல்போனை எடுத்து அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கிறது பாப்பா.

யு டியூப் வீடியோ அப்லோட் :
திடீரென்று கீழே விழும் பாப்பாக்கு அடி பட்டு விடுமோ என அனைவரும் பதறும் போதே லேப்டாப்பில் நெட் கனெக்ட் செய்து போட்டோ, வீடியோ என அனைத்தையும் அப்லோட் செய்கிறது அட்வான்ஸ்டு பாப்பா.

டாக்டர் அங்கிள் ஸ்மைல் பிளீஸ்:
பயந்து போய் கீழே விழுந்து கிடக்கும் மருத்துவரையும் போட்டோ எடுத்து கொள்கிறார் குட்டிப்பாப்பா.

கூகுளுக்கே தண்ணி காட்டும் பாப்பா:
பின்னர் பிரசவ அறையில் இருந்து கூகுள் மேப் மூலம் வழி பார்த்துக் கொண்டே வெளியில் வருகிறது பாப்பா.

நாங்களாம் பிறக்கறப்பவே அப்படி:
அப்லோட் ஆகும் பாப்பா வீடியோவை ரசித்துக் கொண்டிருக்கும் வரவேற்பாளர் அது அங்கு பிறந்த பாப்பாதான் என்று அறிந்து அதிர்கிறார் வெளியில் வரும் பாப்பாவை பார்த்து.

ஐ எம் ஏன் இன்டெர்நெட் பாய்:
நம்ம பாப்பாவோ அசால்ட்டாக "இட்ஸ் எ பாய்" என்று மகிழ்ச்சியாக மருத்துவமனை அளிக்கும் பலூனை கையில் பிடித்துக் கொண்டே வெளியில் செல்கிறது.

இதயம் இல்லாட்டியும் இணையத்தோட பிறக்கும்:
"பார்ன் பார் த இன்டெர்நெட்" என்ற வாசகம் திரையில் தெரிவதுடன் முடிவடைகிறது எம்.டி.எஸ்ஸின் அந்த 3-ஜி இன்டெர்நெட் சேவைக்கான விளம்பரம்.

வைபை கனெக்சனோட கரெக்ட் டெலிவரி :
அனைவரையும் நகைக்க வைத்துள்ள இந்த விளம்பரம் போகிற போக்கில் குழந்தைகள் பிறக்கும் போதே கம்யூட்டருடன் கூடவே நெட் கனெக்சனுடன் பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று உணர்த்துகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications