தமிழக அரசின் இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு: ஐநாக்ஸ், பிவிஆர் இன்று முதல் ஸ்ட்ரைக்!
தமிழக அரசின் இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
சென்னை: தமிழக அரசின் இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரையரங்குகளுக்கு தமிழக அரசு கேளிக்கை வரியை விதித்துள்ளது.

தமிழ் படங்களுக்கு 10%, பிறமொழி படங்களுக்கு 20% கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை வரி விதிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இரட்டை வரி விதிப்பு முறையால் தங்களால் தொழில் செய்ய முடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி இரட்டை வரி விதிப்பு முறையை எதிர்த்து சென்னையில் பிவிஆர், ஐநாக்ஸ் ஆகிய மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸில் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications