முரசொலியில் வைகோ- ஸ்டாலின் சந்திப்பு வந்திருக்கு... ஆனால் யார் கண்ணிலும் படாத அளவுக்கு குட்டியாக!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் குடும்பத் திருமண விழாவில் சந்தித்துக் கொண்டதை அன்றைய தினம் வெளியிடாத திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான முரசொலி, அடுத்த நாள் தம்மாத்தூண்டு சைஸுக்குப் போட்டுள்ளது.
அடுத்த நாள் முரசொலியில், 7வது பக்கத்தில் சின்னதாக கீழே போட்டுள்ளனர் போட்டோவை. அதாவது முக்கியத்துவம் இல்லாத வகையில் போட்டுள்ளனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேரன்- பேத்தி திருமணம் சமீபத்தில் நடந்தது. அதில் திமுக, மதிமுக தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜகவினரும் கூட கலந்து கொண்டனர் என்றாலும் வைகோ, ஸ்டாலின் சந்திப்பும், கருணாநிதியின் பேச்சும்தான் ஹைலைட்டாக மாறிப் போயிருந்தது.
இதை வைத்து மீண்டும் திமுக, மதிமுக, பாமக ஆகியவை கூட்டணி அமைக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் கூட்டணி குறித்து சிந்திக்கவே இல்லை என்று அடுத்த 2 நாட்களில் வைகோ கூறி விட்டார். டாக்டர் ராமதாஸும், திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று மறுத்து விட்டார்.
இதுதொடர்பாக திமுக தரப்பிலிருந்து எந்தப் பேச்சும் இதுவரை இல்லை. இந்த நிலையில் வைகோவை, திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் தேடிப் போய்ச் சந்தித்தது தொடர்பான செய்தி, புகைப்படம், பேட்டி என எதுவுமே அன்றையதினம் வெளியான முரசொலியில் இடம் பெறவில்லை. இது சலசலப்பைக் கிளப்பியது.
ஆனால் அடுத்த நாள் போட்டோ போட்டுள்ளனர்.அதேசமயம் முக்கியத்துவம் இல்லாத வகையில் 7வது பக்கத்தில் கீழே போட்டுள்ளனர். யாரும் உடனே கண்டுபிடித்து விடாதபடி.
முன்பு திமுகவிலிருந்து ஓரம் கட்டப்பட்டு வைத்திருந்த மு.க.அழகிரி, வைகோவைச் சந்தித்துப் பேசினார் என்பதால்தான் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். எனவே மு.க.ஸ்டாலின், வைகோவைச் சந்தித்ததை வைத்து அழகிரி தரப்பு பிரச்சினை கிளப்பி விடக் கூடாது என்பதற்கா்கவே இந்த அடக்கம் ஒடுக்கமான செய்திப் பிரசுரம் என்று கூறுகிறார்கள்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications