ஜெயலலிதா பொது கூட்டத்தில் 5 பேர் பலி: பாமக சார்பில் வழக்கு தொடரப்படும் - அன்புமணி
சேலம்: முதல்வர் ஜெயலலிதா பிரசார பொதுக் கூட்டத்தில் 5 பேர் பலியாகியுள்ளது தொடர்பாக தேவைப்பட்டால் பாமக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் பா.ம.க. அலை வீசி வருகிறது. எங்களுக்கு மிக பெரிய வெற்றி வர இருக்கிறது. அன்புமணியால் மட்டும் தான் பூரண மதுவிலக்கு கொண்டு வரமுடியும்.

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வந்தால், நல்ல தேவையான திட்டங்களை செயல்படுத்துவார் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில இருந்த தி.மு.க., அ.தி.மு.க., வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்து விட்டனர்.
பா.ம.க. ஆட்சிக்கு வந்ததும், மது ஒழிப்புக்கு முதல் கையெழுத்து போடுவேன் என்று சொன்னேன். அது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மது விலக்கு பற்றி 5 ஆண்டு காலமாக பேசாத ஜெயலலிதா தற்போது தேர்தல் தோல்வி பயத்தில் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறி வருகிறார்.
ஜெயலலிதா கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் இதுவரை 5 பேர் இறந்துள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை கழகத்திற்கும், தமிழக தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளோம். தேவைப்பட்டால் 5 பேர் உயிரிழந்ததற்கு பா.ம.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அன்புமணி தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications