Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செய்யாத தவறை ஒப்பு கொள்ள மிரட்டும் என்ஐஏ அதிகாரிகள்! மயிலாடுதுறை ஆட்சியரிடம் 300 முஸ்லீம்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

சீர்காழி: சீர்காழி அருகே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தொடர்புடையதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருடன் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்ததற்காக பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கேட்காத மற்றும் பார்க்காத சம்பவங்களை ஒப்புக் கொள்ள சொல்லி தங்களை மிரட்டுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்த 300 பேர் மனு அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த அல்பாசித் என்பவர் தடை செய்யப்பட்ட ISIS இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி அன்று சென்னையில் கைது செய்தனர்.

sirkali nia isis

அதனைத் தொடர்ந்து அல்பாசித்துடன் வாட்ஸ் ஆப் குழுவில் தொடர்பில் இருந்ததாக திருமுல்லைவாசல் பகுதியில் 15 வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விசாரணை செய்தனர்.

அதனை தொடர்ந்து மேற்படி 15 நபர்களும் குறிப்பிட்ட தினத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் கொடுத்தனர். இதுவரை 27 நபர்களுக்கு சம்மன் கொடுத்துள்ளதாகவும் இதில் சிலர் சிறுவர்களாகவும், கல்லூரி மாணவர்களாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி கடந்த 15, 16 17 ஆகிய மூன்று தினங்கள் சீர்காழி காவல் நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது விசாரணைக்கு ஆஜரான சிலரிடம் அவர்களுக்கு தொடர்பில்லாத சம்பவங்களை கேட்டதாகவும், பார்த்ததாகவும் ஒப்புக் கொள்ளச் சொல்லி அதிகாரிகள் மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு வர முடியாத நபர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு வற்புறுத்துகின்றனர். இவ்வாறு இவர்கள் செயல்படுவதால் சகோதரர்களாக வாழ்ந்து வரும் மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ஒரு விதமான அச்சத்தையும் பிரிவினையும் உருவாக்க முயல்கிறார்கள்.

இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே மேற்படி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், அதே நேரம் தவறு செய்பவர்களை சட்டப்படி தண்டிப்பதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

மயிலாடுதுறை மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+