காங்கிரஸுக்கு மறுமலர்ச்சி முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆதரவு
காரைக்குடி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மறுமலர்ச்சி முஸ்லிம் முன்னேற்ற கழக அமைப்பாளர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதாகவும், அதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம்,
"ரகுராம் ராஜன் கமிட்டி பல்வேறு குறியீடுகளின் கீழ் தரவரிசையில் குஜராத்திற்கு 12 ஆவது இடத்தை அளித்துள்ளது. இந்தியாவின் தலை சிறந்த மாநிலங்களின் வரிசையிலும் குஜராத் மாநிலம் இல்லை. மோசமான மாநிலங்களின் வரிசையிலும் இல்லை.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர் பதவிகளில் பணியாற்றிவர்கள் ஓய்வுக்கு பின்னர் அரசியலுக்கு வரலாம். அவர்களும் இந்திய குடிமகன்கள் தான். அவர்கள் அரசின் ஒய்வூதியத்தை பெறுவதிலும் தவறில்லை.
ஆனால் உயர்ந்த நிலை பதவிகளை வகித்து நாட்டின் ரகசியங்களை பாதுகாக்க வேண்டிய, பாதுகாத்து வந்த உயர் அதிகாரிகள் பணி ஓய்வு பெற்ற ஒரு சில நாட்களில் அரசியல் கட்சியில் சேர்ந்து தேர்தலிலும் போட்டியிடுவது சட்டப்படி சரியாக இருந்தாலும் இது விபரீத போக்கிற்கு வழி வகுக்கும். இதற்கு ஏதேனும் வழி தேடவேண்டும்.
பாஜக வின் 42 பக்க தேர்தல் அறிக்கையை படித்தவுடன் சோர்வு தான் ஏற்படுகிறது. சில பக்கங்களை படிக்கும் போது ஆழந்த கவலை ஏற்படுகிறது. சில பக்கங்களை படிக்கும் போது நகைப்பு ஏற்படுகிறது" என்று அவர் கூறினார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications