பக்ரீத் பண்டிகை.. தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தியாகத்திருநாளாம் பக்தீர் பண்டிகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
சென்னை மற்றும் தமிழகத்தின்அனைத்துப் பகுதிகளிலும் இன்று காலை சிறப்பு பக்ரீத் தொழுகைகள் நடத்தப்பட்டன. இதில் முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிவி்ல் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். மேலும் குர்பானி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தங்களால் முடிந்த தானத்தை ஏழைகளுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் இஸ்லாமியர்கள் அளித்தனர்.

டெல்லி,மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்பட நாடு முழுவதும் இன்று பக்ரீத் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது.
பக்ரீத்தையொட்டி நாடு முழுவதும் இன்று இறைச்சி விலை அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக ஆட்டுக்கறி விலை அதிக அளவில் இருந்தது.












Click it and Unblock the Notifications