சிவகங்கையில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை- வீடியோ
சிவகங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தில் மழை பெய்ய வேண்டும் என இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை ஈதுகா மைதனத்தில் இஸ்லாமியர்கள் திரண்டு, மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பப்டு 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.

மேலும் ஏரி, குளம், ஆறுகளில் நீர் வற்றிவிட்டதால் குடிநீருக்கு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கடுமையான வெப்பமும் நிலவி வருவதால் மக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆட்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கையில் இஸ்லாமியர்கள் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தியுள்ளனர். அதில் ஆண்கள் தனியாகவும் பெண்கள், குழந்தைகள் தனியாகவும் கூடி தொழுகை நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications