Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முத்தமிழ் முருகன் மாநாடு.. "100 அடி உயர கொடி.." பிரமாண்ட வேல்.. பக்தர்கள் வருகையால் குலுங்கியது பழனி

Subscribe to Oneindia Tamil

பழனி: பழனியில் கண்காட்சி-கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். விழா தொடங்கியதும் 100 அடி உயர கொடி கம்பத்தில் மாநாட்டிற்கான கொடி பறக்கவிடப்பட்டது. மஞ்சள் நிறத்திலான கொடியில் முருகன் முத்தமிழ் மாநாடு என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கி நாளை வரை அருள்மிகு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Palani Lord Murugan MK Stalin

1300 கட்டுரைகள்: பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் மாநாட்டில் தமிழக அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஆதீனங்கள், இங்கிலாந்து, இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் என விவிஐபிக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் 'தமிழ்க்கடவுள் முருகனின்' சிறப்பை உலகறிய செய்ய வேண்டும் என்ற நோக்கில் முருகன் வழிபாட்டு சிறப்புகள், இலக்கிய சிறப்புகள் குறித்து சுமார் 1,300 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது.

பிரமாண்ட அரங்கம்: இதற்காக உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் தங்களது கட்டுரைகளை பதிவு செய்து வைத்துள்ளார்கள். மாநாட்டில் விழா மலர், ஆய்வு மலர் என 2 மலர்கள் வெளியிடப்படுகிறது. மாநாட்டுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள், பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் முருகனின் சிறப்புகள் குறித்த கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

100 அடி உயரத்தில் கொடி: அரங்கங்களின் முன்பு 'மலைபோன்ற செட்' அமைக்கப்பட்டு உள்ளது. இந்த செட்டின் மேற்பகுதியில் முருகன், சிவன்-பார்வதி இருப்பது போன்ற நுழைவு வாயில் உள்ளது. இதன் அருகிலேயே, 100 அடி உயரத்தில் மாநாட்டு கொடி ஏற்றப்பட்டது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கொடியினை ஏற்றி வைத்தார். கொடியேற்றும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சி அரங்கம்: இதற்காக உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் தங்களது கட்டுரைகளை பதிவு செய்து வைத்துள்ளார்கள். மாநாட்டில் விழா மலர், ஆய்வு மலர் என 2 மலர்கள் வெளியிடப்படுகிறது. மாநாட்டுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள், பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் முருகனின் சிறப்புகள் குறித்த கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.


மாநாட்டுக்கு வரும் பங்கேற்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்கு தனித்தனியாக அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. விஐபிக்களுக்கு கேரட், பீன்ஸ் பொறியல், உருளைகிழங்கு வறுவல், பருப்பு மசால் வடை, அடை பிரதமன் பாயாசம் உள்ளிட்ட உணவுகளும் இடம் பெற்று இருந்தன.

4 லட்சம் பேர்: மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு முருகனின் ராஜஅலங்கார படம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், கந்தசஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு உள்ளிட்டவை அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 4 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்தார்.

பழனியில் நடைபெற்று வரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+