முத்துக்குமாரசாமி தற்கொலையில் சிக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கல்லூரி தோழி…
தற்காலிக டிரைவர் நியமனத்தில் அமைச்சர் முதல் அதிமுகவின் அடிப்பொடிகள் வரை கொடுத்த டார்ச்சரில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் வேளாண்மைத்துறையில் அதிகாரியாக பணியாற்றிய முத்துக்குமாரசாமி.
நேர்மைக்கு பரிசு மரணம்தானா என்று கொதித்த அரசியல் கட்சியினருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ஆளும் கட்சி வேறு வழியின்றி முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தது. கூடவே முத்துக்குமாரசாமிக்கு செல்போனில் பேசி டார்ச்சர் கொடுத்த தலைமை பொறியாளர் செந்திலையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளது.

ஆனால் நெல்லையில் வேளாண்மைத்துறையில் டிரைவர்கள் நியமனம் செய்யப்பட்டது குறித்த தகவல்களை அமைச்சருக்கு போட்டு கொடுத்தது அனைத்தும் முத்துக்குமாரசாமியின் கீழ் பணியாற்றிய ஒரு பெண் ஊழியர்தான் என்பது உறுதியாக தெரியவந்துள்ளது.
அக்ரியின் கல்லூரி தோழி
இந்த பெண் ஊழியர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் கோவை விவசாயக் கல்லூரியில் படித்தவராம். எனவேதான் திருநெல்வேலி வேளாண்மைத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் இவர் மூலமாகவே அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு முத்துக்குமாரசாமியின் நடவடிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நெருக்கடி கொடுத்தது யார்
7 டிரைவர்கள் நியமனத்தையும் அவர்கள் யார் யார் என்பதையும் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஃபேக்ஸ் மூலமாக அனுப்பியதோடு ஒரு மாத காலமாக ஆர்டர் போட முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட அந்த பெண் அலுவலரும் காரணம் என்கின்றனர்.
டார்ச்சர் செய்த பெண்
அதோடு மட்டுமல்லாது அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த லிஸ்டை முத்துக்குமாரசாமியிடம் கொடுத்து அவருக்கு மனஉளைச்சலை அதிகப்படுத்தியதில் அந்த பெண் ஊழியருக்கு அதிக பங்கு உண்டாம். இது தொடர்பாக அலுவலகத்தில் இந்த பெண் ஊழியருக்கும் முத்துக்குமாரசாமிக்கும் காரசார விவாதங்கள் நடைபெற்றுள்ளது என்கின்றனர் அலுவலக ஊழியர்கள்.
பெண் ஊழியர் எஸ்கேப்
முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்குப் பின்னர் ஒரு மாதம் விடுப்பில் சென்றுவிட்ட அந்த பெண் ஊழியர் சில தினங்களுக்கு முன்புதான் மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார். அவரை மீண்டும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். எனவே அக்ரியின் கல்லூரித் தோழியும் இந்த கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படுவதால் இன்னும் சில தினங்களுக்குள் அந்த பெண் ஊழியர் கைது செய்யப் பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications