Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘நானெல்லாம் கோபப்பட்டால் கூட்டணியே கிடையாது..’ - விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

ரிஷிவந்தியம்: 'நான் கோபப்படுவதாக கூறுகின்றனர். நான் கோபப்பட்டால் கூட்டணியே கிடையாது' என்று பேசியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

ரிஷிவந்தியம் தொகுதியில் நூரோலை கிராமத்தில் புதிய பயணியர் நிழற்குடையை திங்கள்கிழமை விஜயகாந்த் திறந்துவைத்தார். தொடர்ந்து அத்தியூர் ரேசன் கடையின் புதிய கட்டிடத்தையும் திறந்துவைத்தார். பின்னர் பகண்டை கூட்ரோடு சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் 114 மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் மற்றும் சக்கர நாற்காலிகளை வழங்கினார் விஜயகாந்த்.

பிறகு, விழாவில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியதாவது....

144 தடை உத்தரவு....

144 தடை உத்தரவு....

'நான் தொகுதிக்கு வருவது இல்லை என பலர் கூறுகின்றனர். கடந்த 3 மாதங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால் வரவில்லை.

நான் குடித்து விட்டுப் பேசுகிறேனா..?

நான் குடித்து விட்டுப் பேசுகிறேனா..?

அரசை எதிர்த்துப் பேசினால் குடித்துவிட்டு பேசுகிறேன் என்று வதந்தி பரப்புகின்றனர். காவல்துறையினர் சாதிக்கப் பிறந்தவர்கள்.ஆனால், அவர்களது தற்போதைய நிலைமை அப்படி இல்லை.

கூட்டணியே கிடையாது.....

கூட்டணியே கிடையாது.....

கடந்த சில மாதங்களுக்கு முன் ஏர்போர்ட்டில் நடந்த ஒரு சம்பவத்தில் விஜயகாந்த் கோபப்படுகிறார் என்றனர். ஆனால். நான் கோபப்பட்டால் கூட்டணி கிடையாது.

இது 11வது முறை...

இது 11வது முறை...

இதுவரை கருணாநிதியோ, ஜெயலலிதாவோ எத்தனை முறை தொகுதிக்குச் சென்றுள்ளனர்? நான் 11-வது முறையாக இப்போது தொகுதிக்கு வந்துள்ளேன்.

தொண்டர்களை நம்புகிறேன்....

தொண்டர்களை நம்புகிறேன்....

தேமுதிகவினர் மீது வழக்கு பதியும் காவல்துறை, வைகுண்டராஜன் மீது ஏன் வழக்கு பதியவில்லை? நான் போலீசை நம்புவதில்லை. என் தொண்டர்களை நம்புகிறேன் என்றார் அவர்.

ஜெயலலிதா அறிக்கை....

ஜெயலலிதா அறிக்கை....

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், வைகுண்டராஜன் பற்றி 2007- ல் செங்கோட்டையன் பேசியுள்ளார். அவருக்கு ஆதரவாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார், அவர்கள் எப்படி அவர் மீது வழக்கு பதிவு செய்வார்கள்?

நான் முதல்வரானால்....

நான் முதல்வரானால்....

என்னை ஆட்சியில் உட்காரவைத்தால் திரும்ப இறக்கவே முடியாது. கடந்த ஆட்சியில் திமுக தீயசக்தி என்றார் ஜெயலலிதா. அவர்மீது கருணாநிதி வழக்கு போட்டாரா? எதிர்கட்சித் தலைவருக்கான சலுகைகளைப் பயன்படுத்தி மக்கள் பணத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+