என் பின்னால் உள்ள கூட்டம் தானா வந்தது, எனக்காக தீக்குளிக்கவும் தயங்காதது: பவர் ஸ்டார்
சென்னை: தன் பின்னால் உள்ள ரசிகர்கள் கூட்டம் தானாக வந்தது என்றும், தனக்காக அவர்கள் தீக்குளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திடீர் என்று ஒரு நாள் கோடம்பாக்கத்தில் வந்து குதித்தவர் தான் சீனிவாசன். நான் ஹீரோவாக்கும் என்று கூறிய அவரை பார்த்து அனைவரும் சிரித்தார்கள். ஆனால் அவரோ ரூம் போட்டு யோசித்து தனக்கு தானே பவர் ஸ்டார் என்ற ஒரு பட்டத்தை அளித்து பெருமைப்பட்டுக் கொண்டார்.
பவர் ஸ்டார் என்ற பட்டம் அளித்த பிறகும் அவரை யாருமே திரும்பிப் பார்க்கவில்லை.

சூப்பர்ஸ்டார்
சூப்பர் ஸ்டாரை வம்புக்கு இழுத்தால் நிச்சயம் அனைவரின் கவனமும் தன் பக்கம் திரும்பும் என்பதை அறியா மனிதர் இல்லை பவர்.

போட்டி
சூப்பர் ஸ்டாருக்கு போட்டி என்றால் அது இந்த பவர் ஸ்டார் என்று ஒரு பஞ்ச் டயலாக்கை விட்டார். கடைசியில் அது புஸ்ஸானது. இருப்பினும் பவர் அசந்துவிடவில்லை.

சந்தானம்
புகழைத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் தான் பவர் வீட்டுக் கதவை சந்தானம் தட்டி கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று கேட்டார். பவரும் துள்ளிக் குதித்து வந்து நடித்தார், பிரபலமும் ஆனார்.

ரசிகர்கள்
நான் பேசும் மேடையில் எல்லாம் விசில் பறக்கிறது, எனக்கு தான் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். யாருக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளார்களோ அவரே சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்தார் பவர்.

சூப்பர்
தனது பட்டத்தில் இருக்கும் பவரை கட் பண்ணிவிட்டு சூப்பரை இணைக்க அவரும் தன்னால் முயன்றதெல்லாம் செய்கிறார். ம்ம்ம் ஆனால் ஒன்னும் நடக்க தான் மாட்டேன் என்கிறது.

கூட்டம்
பவர் பின்னால் இருக்கும் ரசிகர்கள் கூட்டம் அவர் பணத்தை காட்டி சேர்த்த கூட்டம் என்ற பேச்சு உள்ளது. ஆனால் பவரோ இதை அடியோடு மறுக்கிறார்.

தீக்குளிக்க
தனது பின்னால் வரும் ரசிகர்கள் கூட்டம் தானாக வந்தது என்று ரஜினி ரேஞ்சுக்கு பேசுகிறார் பவர். மேலும் அந்த ரசிகர்கள் தனக்காக தீக்குளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார் பவர்.

பாவம்
பவர் இப்படி தம் கட்டி பேசும் பஞ்ச் வசனங்களை ரசிகர்கள் காமெடியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications